Saturday 13 April 2024

கோவில் திருவிழாவிற்கு ஊர்வலத்தை விட்டுக்கொடுத்த இசுலாமியர்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கெங்குவார்பட்டி.. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தி பாடல்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளை ஒளிபரப்பப்படும்.
அதேநேரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை நிறுத்தி விடுவார்கள்.
 மேலும் திருவிழாவின் கடைசி நாளில் பள்ளிவாசலுக்கு தனியாக பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி முத்தலாம்மன் கோவில் திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
 வெளியூர்களில் வாழும் கெங்குவார்பட்டி மக்கள் மொத்தமாக சொந்த ஊர் வந்து விழாவினை சிறப்பித்தனர். கிராம மக்கள் பலர் முத்தலாம்மனுக்கு பூச்சட்டி எடு்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நிறைவு பெற்றது.
இதனிடையே முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. 
நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்று கூடி ஊர்வலமாக மஞ்சளாறு கரையோரத்தில் உள்ள தோப்புக்கு செல்வது வழக்கமாகும்.
ஆனால் நேற்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஊர்வலம் செல்வதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். 
அவர்கள் தனித்தனியாக பள்ளிவாசல் தோப்புக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். 
பின்பு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 
இந்த சம்பவத்தை பார்த்த கெங்குவார்பட்டி ஊர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 மேலும் இ்ந்த சம்பவம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: oneindia இணையம்

Friday 5 April 2024

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

தொடரும் வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு

அண்ணாதுரை முதல் ஸ்டாலின் வரை தொடரும்  தமிழர் அடையாள வெறுப்பு 

 1968 இல் அண்ணாதுரை போட்ட இருமொழிக் கொள்கை அரசாணைக்கும்
2021 இல் ஸ்டாலின் போட்ட அயலகத் தமிழர் நலக் கொள்கை அரசாணைக்கும் 
 என்ன ஒற்றுமை?!
 இரண்டிலுமே தமிழர், தமிழ்மொழி என்கிற வார்த்தைகள் இல்லை.

 1968 இல் நீதிக் கட்சி கொண்டுவந்திருந்த மும்மொழிக் கொள்கையைக் கைவிட்டு (இந்தியை கைவிட்டு) அண்ணாதுரை தனது இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்த போது
"தமிழ் மற்றும் ஆங்கிலம்" என்று தெளிவாக கூறவில்லை மாறாக  "ஆங்கிலம் மற்றும் தாய்மொழி" என்று கூறி தாய்மொழி என்பற்கு "பிராந்திய மொழி (தமிழாம்!) அல்லது பிராந்திய மொழி அல்லாத இந்திய மொழி" என்று வரையறை செய்தார்.
 அதாவது தமிழ் என்றே அரசாணையில் வரவில்லை!
எப்படி ஆங்கிலம் என்று தெளிவாக கூறி தமிழ் என்பதை உச்சரிக்க அண்ணாவுக்கு நாக்கு கூசியதோ அதேபோல மு.க.ஸ்டாலினுக்கும் கூசுகிறது.

 2021 இல் ஸ்டாலின் தனது மொழிவழிச் சிறுபான்மை நலக் கொள்கையில் தெளிவாக "மொழிவழிச் சிறுபான்மை என்போர் முக்கிய மொழி (principle language! அதாவது தமிழ்!) அல்லாத மொழி பேசுவோர் அவர்களில் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராஷ்ட்ரா பேசுவோர்  கணிசமானோர்" என்று தமிழரைத் தவிர பிறரை தெளிவாக மொழி அடையாளத்துடன் வரையறுத்துள்ளார். 
இதிலும. தமிழ் என்று வரவில்லை.

 தமிழர் என்பதற்கான ஒரு வரையறையும் வேறொரு ஆவணத்தில் ஸ்டாலின் அரசு வரையறுத்துள்ளது  அதாவது "தமிழ்நாட்டார் யார்" என்ற வரையறை!

 அது அயலகத் தமிழர் நலக் கொள்கை வரையறையில் "தமிழ்நாட்டில் பிறந்த அல்லது 3 ஆண்டுகள் வாழ்ந்த எவரும் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்தால்" என்று அயலகத் தமிழருக்கான வரையறையைச் செய்கிறார். 
 அதாவது தமிழகத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர் தமிழர், அல்லது தமிழகத்தில் மூன்றாண்டு வாழ்ந்தாலே அவர் தமிழர்!
 இங்கே மட்டும் மொழி வரவில்லை!

மேற்கண்ட கருத்துகள் fine time media இல் திரு. அறிவன் ஸ்ரீனிவாசன் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டன.

 இதிலிருந்து தெரிவது என்ன?!
இன்றும் தொடர்கிறது வந்தேறிகளின் தமிழின அடையாள வெறுப்பு! 

Wednesday 3 April 2024

பாமக இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது

பா.ம.க இசுலாமியரை பயன்படுத்தி கொண்டது 

2013 இல் எழுதப்பட்ட பதிவு 

பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.

 திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான் களத்தில் இறக்கியது.
ஆனால், 2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்றபோது (20 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்) ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை.

 2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றபோது (17 எம் எல் ஏக்கள் வெற்றி பெற்றனர்) கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.

2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில்லை.

குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள் நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.

திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
Maruppu - மறுப்பு
05.08.2013

Sunday 31 March 2024

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்

பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்!
இனப்படுகொலை நடத்த காத்திருக்கும் கன்னடர்!
அமைதியாக வேடிக்கை பார்க்கும் திராவிடம்!

 தலைக்கு ஒருநாளுக்கு 108 லிட்டர் கையிருப்பு வைத்துள்ளது கர்நாடகா!
 தரவேண்டிய நீரில் பாதி தான் தந்துள்ளது!
உச்ச நீதிமன்றம் கூறினாலும் தண்ணீர் தரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டது கர்நாடக அரசு!

கீழ்க்காண்பது விகடன் 29.03.2024 இல் வெளியிட்டுள்ள கட்டுரை

 பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: 
உண்மைகளும் உருட்டுகளும்!

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு கர்நாடகம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
 அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களாக பெங்களூரு மாநகரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற தகவலை பரப்பி வருகிறது கர்நாடக அரசு.
 கர்நாடகம் சொல்வதெல்லாம் உண்மையா, இல்லை வழக்கம்போல உருட்டுகளா என்பது குறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தில் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசியபோது, “சென்ற ஆண்டு (2023) பருவமழை மிகக் குறைவாகப் பெய்ததால் பெங்களூரு மாநகர மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கிறது கர்நாடக அரசு.
 அம்மாநில துணை முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் 'கர்நாடகாவில் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே மழை பெய்தது.  பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீரும் தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. எனவே காவிரி நதியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஏன் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், ஒரு சொட்டுத் தண்ணீரையும் கர்நாடகா வழங்க முடியாது' என்று தெரிவிக்கிறார். 
அதே சமயம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் 67.16 டி.எம்.சி கொண்ட நீர்த்தேக்கத்தைக் கட்டியே தீருவோம் என்றும் முழங்குகிறார். 
இத்தனையும் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு மிக மிக அமைதியாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் காவிரி டெல்டா பகுதி உழவர் சங்கங்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 
இருப்பினும் தமிழ்நாட்டின் உயர் அலுவலர்களும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர்களும் இன்னும் குறிப்பாக இந்நிலை பற்றி உரத்துப் பேச வேண்டிய காவிரி தொழில் நுட்பக் குழுமமும் உண்மைநிலை பற்றிப் பேசாமல் இருப்பது நம்மைப் போன்றோர்க்குப் பெரும் கவலையளிக்கிறது.


இணையதளத்தில் தேடினால் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் (2019 - 2023) பெய்த மழையளவு கிடைக்கிறது. நம்மைப் பொறுத்த வரை கர்நாடகா மாநில முழுமையும் பார்க்காமல் காவிரி ஆறு பாயும் பகுதியிலுள்ள மழைப் பொழிவை மட்டும் பார்த்தால் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 714 மி.மீ. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆண்டு சராசரியை விடக் (+75 சதவிகிதம் வரை) கூடுதலாகவே மழைபெய்துள்ளது. ஆனால் 2023-ல் பெய்த மழை அளவு 572 மி.மீ. இது சராசரி மழைப்பொழிவை விட 20 சதவிகிதம் குறைவு.
இதன்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177.25 – டிஎம்சியில் 20 சதவிகிதம் (34.35 டிஎம்சி) குறைத்து 137.80 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். 
நமக்கு பில்லிகுண்டுலுவில் வந்த காவிரி நீரின் அளவோ வெறும் 78.10 டி.எம்.சி மட்டுமே. 
பொய்யான யதார்த்த கள நிலவரத்திற்கெதிராக அரசியல் நாடகமேடை நிகழ்வுகளை காவிரியில் நமக்குத் தராமலிருக்கவும் மேக்கேதாட்டூ அணையினைக் கட்டவும் அழுத்தம் தர அரங்கேற்றிவருகிறது.
 இத்தகைய பொய்ப்புனைவுப் பரப்புரைகளை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. 
காலதாமதமின்றி அலட்சியமாக இல்லாமல் உடனே செயற்படவேண்டும். 
அப்பொழுதுதான் நம் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட முடியும். 
சட்டநடவடிக்கைகளைக் கர்நாடகா அரசு எப்போதும் சட்டை செய்வதில்லை.

எனவே இந்திய அரசியல் சட்டப் பிரிவு 365-இன்படி குடியரசுத் தலைவருக்குக் கடுமையான அழுத்தம் தரவேண்டும். 
தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும், காவிரி உரிமை மீட்புக்குழுவும் தங்களுக்குள்ள அரசியல் பக்திப் பரவசங்களை ஒதுக்கிவிட்டு கர்நாடகாவின் பொய்ப்பரப்புரைகளை மேற்குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மறுத்து விளக்கித் தொடர் எழுச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

காவிரியிலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கு நாள் ஒன்றுக்கு 1450 எம்எல்டி அளவுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக காவிரி ஐந்தாம் நிலை திட்டத்திலிருந்து 750 எம்எல்டி குடிநீர் வழங்கிடப் பணிகள் நடந்துவருகின்றன. 2023-ல் பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 29 லட்சம். ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 108 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் (2023) மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சம். வழங்கப்படும் குடிநீரின் அளவு 1000 எம்.எல்.டி. 
ஓர் ஆளுக்கு, நாள் ஒன்றிற்கு 85 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக சென்னைக் குடிநீர் வாரியமோ செய்தி ஏடுகளோ தமிழகத் தொலைகாட்சிகளோ பரப்புரை செய்யவில்லை. ஆனால், சென்னை மக்களைவிடக் கூடுதலாகக் குடிநீர் பெறும் பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாள்தோறும் பரப்புரை செய்வதை ஏன் தமிழ்நாடு அரசு மறுதலித்துப்பேசவில்லை. இதிலிருந்தே கர்நாடகா அரசு எப்படி நாடகமேடைகாட்சிகளை அரங்கேற்றுகிறது என்று தெளிவாகப் புரியும்.

நம் சென்னைக் குடிநீர் வழங்கு வாரியம் 15-03-2024-ல் வெறும் 10.11 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருப்பை வைத்துக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் வரும் 9 மாதங்களுக்கு வழங்குவோம் என்று தெரிவிக்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ காவிரி அணைகளில் 60 டிஎம்சி க்குமேல் தண்ணீரை இருப்பில் வைத்துக் கொண்டு பெங்களூரு மாநகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று வேண்டுமென்றே நாடகமாடுகிறது. 

 நம் தமிழக அரசு ஏன் இதை வெளிப்படுத்தி மறுத்து அறிக்கை விடவில்லை என்பது புதிராக உள்ளது.
உண்மை நிலைமை இப்படியிருக்கும்போது செய்தி இதழ்களும் நம் ஊர் தொலைகாட்சிகளும் கூட பெங்களூருவில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கின்றன. 
இவற்றைப்பார்த்து அமெரிக்க நண்பர் இச்செய்தி உண்மையா என கேட்கிறார். 
கர்நாடகத்தின் பொய் பிரசாரங்களை தமிழக அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது” என்றார்.
 பெங்களூரில் எங்களுடைய தொடர்பில் குடும்பத்தினர்களும் பணிபுரிபவர்களும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.

Also Read
மேக்கேதாட்டூ... நெருங்கிவிட்ட ஆபத்து... காவிரி ஆணையம் அனுமதி! துணைபோகிறதா தமிழக அரசு?

Also Read
மேக்கேதாட்டூ அணை விவகாரம்: அடித்து ஆடும் கர்நாடக காங்கிரஸ் அரசு... அமைதி காக்கிறதா திமுக?

Also Read
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்... கேவலமான அரசியல்!

Also Read
`தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர நாங்கள் முட்டாள்கள் அல்ல'-கடுகடுக்கும் சிவக்குமார், மௌனம் காக்கும் திமுக

Saturday 16 March 2024

The TamBrahs

The TamBrahs

இன்று நாம் தமிழ்குடிகள் பிற வந்தேறிகளுடன் பொதுவான குடி அடையாளத்தில் அடைக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.
 இணைய யுகத்தில் இதை முதலில் தொடங்கியது பார்ப்பனர்கள் தான்.
  இன்று குலாலா அடையாளத்தில் இருந்து குயவர்களும்
 நரிக்குறவர் அடையாளத்தில் இருந்து குறவர்களும்
 யாதவர் அடையாளத்தில் இருந்து கோனார்களும் தமது இன அடையாளத்தை  மீட்க குரல் எழுப்புகிறோம்.

  இப்படி பொதுவான 'பிராமணர்' அடையாளத்தில் வெகுகாலமாக அடைக்கப்பட்டிருந்த பார்ப்பனர்கள் தம்மை தனிப்படுத்த  'தமிழ் பிராமணர்' அதாவது 'தம்பிராஸ்' என்ற நவீன பெயருடன் தமது இன அடையாளத்தை தனித்து காட்ட முற்பட்டனர்.

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதை (பெரும்பாலும்) அமெரிக்காவில் நன்கு செட்டில் ஆகிவிட்ட தமிழே தெரியாத மாடர்ன் பார்ப்பன பிள்ளைகள் செய்துள்ளனர்!
 உலகப் பார்ப்பனர் இதைப் பின்பற்றி ட்ரென்டிங் இல் வைத்துள்ளனர்.

 இது ஆதிக்க சாதிவெறி என்றால் அவர்கள் 'பிராமணர்' என்றாலே போதுமானது!
 தமிழ் என்கிற இன அடையாளத்தை அதில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!
 ஆனாலும் இயல்பாகவே இது நடந்துள்ளது!
 
இயல்பானது இனம்!
பார்ப்பனர் தமிழரே!
 

Saturday 2 March 2024

சாந்தன் இன்னொரு திலீபன்

சாந்தன் இன்னொரு திலீபன்

 அன்று திலீபன் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சாகவிட்டது ஹிந்தியம்!
 ஆனால் சாந்தனை 30 ஆண்டுகள் அனுஅனுவாக வதைத்து சாகும் தருவாயில் கொஞ்சம் கருணை காட்டியது ஹிந்தியம்!
 ஆனால் அதையும் விடாத திராவிடம் அவரை பிடித்து மேலும் வதைத்து அவர் குற்றுயிராக தன் ஊருக்குத் திரும்ப இருந்த கடைசி நாளில் கொன்று முடித்தது!

 பிரபாகரன் பிறந்த வயிற்றை வைத்திருந்தார் என்பதாலேயே பார்வதியம்மாள் மரணத் தருவாயில் சிகிச்சைக்கு வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பி கொன்ற திராவிடம் ஹிந்தியத்தை விட கொடூரமானது! 

 போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய திராவிடம் சட்டத்திற்கு புறம்பாக ஈழத் தமிழரை வதைக்கவே கட்டியுள்ளது சிறப்பு முகாம் எனும் கொட்டடி சிறை!

  நீதிமன்றம் விடுதலை செய்த 5 பேரை சட்டவிரோதமான  கோட்டடியில் இறுக பூட்டி 2 பேரை சாகடித்துவிட்டது!
இன்னும் 3 பேர் சாவுக்கு காத்திருக்கின்றனர்!

 இதேபோல கர்நாடகா விலும் தூக்குமேடை வரை போன 4 தமிழர்கள் கதை இருக்கிறது!
 செய்யாத தவறுக்கு கைதாகி ஹிந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டவர் வீரப்பன் அண்ணன் மாதையன்!

  கொட்டடியில் அடைக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதி 2 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சிறையில் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

 தமிழர்களை 'வைத்திருந்து கொல்வது' ஹிந்தியமும் திராவிடமும் இன்பமடைய சிறந்த வழியா?!

 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத தன் மகன் வரப்போகிறான் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் அந்த முதிய தாயின் கண்முன் உருக்குலைந்து இறந்த மகனது பிணத்தை போட்டு எக்காளமிட்டு சிரிக்கிறது திராவிடம்! 

கூடவே கைகொட்டி கூத்தாடும் இந்தியமும் சிங்களமும்!

 இதற்கு தீர்வு இல்லையா?!

இதற்குத்தானா தங்கை செங்கொடி தன்னை தீயில் போட்டு அலறி நம்மை அறியாமையில் இருந்து எழுப்பினாள்?!

 சங்கரலிங்கனார் தொடங்கி சாந்தன் வரை ஒரு தமிழன் அவன் இந்திய குடிமகனோ இலங்கை குடிமகனோ அறவழியோ ஆயுதவழியோ ஆணோ பெண்ணோ அப்பாவியோ எவனாக இருந்தாலும் வதைபட்டு சாவதுதான் விதியா?!

 
 

 

Thursday 29 February 2024

திராவிட மாடல் ஆட்சியின் அதிர்ச்சிகள்

திராவிட மாடல் ஆட்சி 
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்

நாள்: 29.02.2024

  முரசொலி மூலப் பத்திரம் சர்ச்சையில் 'அரசியலில் இருந்தே விலகுவேன' என்று வாய்ச் சவால் விட்டதில் இருந்து ஸ்டாலின் தீவிரமாக அரசியல் களத்திற்கு வருகிறார்.
  தேர்தல் பிரச்சாரத்தின் போது குனியமுத்தூர் பிரச்சாரத்தில் கேள்விகேட்ட பெண்ணை வேலுமணி ஆள் என்று கூறி வெளியேற்றிய அன்றிலிருந்து மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி ஏற்படுத்துவது தொடங்கிவிட்டது.

 இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நடந்த அதிர்ச்சிகள்...
* 380 கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோர் வரவழைப்பு
* நால்வர் விடுதலை ஆனதும் சிறப்பு முகாமில் அடைப்பு
* விவசாயிகள் மீது குண்டாஸ்
* nlc க்காக விளைந்து நின்ற நிலம் அழிப்பு
* இசுலாமியர் விடுதலைக்கு எதிராக அறிக்கை 
* வேங்கைவயல் குடிநீரில் மலம்
* தூத்துக்குடி காதல் திருமணம் ஆணவக்கொலை
* சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து கதறல்
* நெல் கொள்முதல் நிலைய கொட்டகைக்கு நிதி ஒதுக்காமை
* மேயர் பிரியா ரங்கநாத நாயுடுவால் பொதுவெளியில் பாலியல்  சீண்டல்
* பேனா சிலை
* பாடபுத்தகத்தில் திராவிட புரட்டு
* நீட் கையெழுத்து நாடகம் 
* உச்ச நிலையில் கனிமவள கொள்ளை
* கர்நாடக சென்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் 
* ஆனாலும் காவிரி நீர் மறுப்பு காய்ந்து போன அணை
* மின்கட்டண உயர்வு
* பால் விலையேற்றம் மில்லி குறைப்பு
* தாலி தங்கம், லேப்டாப் , ஸ்கூட்டி போன்ற அதிமுக மகளிர் திட்டங்கள் நிறுத்தம்
* டாஸ்மாக் 10ரூ அதிகம் வாங்கிய செந்தில் பாலாஜி 
* வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது
* திமுக வாக்களித்த நிலம் கிடைக்காத அஸ்வினி எனும் நரிக்காரர் பேட்டி அளித்த பிறகு அடிதடி வழக்கில் கைது
* சாலிகிராமம் கூட்டத்தில் பெண் போலீஸ் மீது திமுக தொண்டர்கள் பாலியல் அத்துமீறல்
* ஈரோடு இடைத்தேர்தல் காளியம்மாள் மீது பீர் பாட்டில் வீச்சு
* ஈரோடு இடைத் தேர்தல் மக்களை அடைத்துவைத்து  விருந்து மற்றும் இன்ப சுற்றுலா 
* மாலைத்தீவு ராணுவம் தமிழக மீனவர் கைது
* ரயில் வடவர் பெண்ணிடம் அத்துமீறல் 
கஞ்சா 
* குட்கா தடை நீக்கம்
* கள்ளசாராய மரணம் அதற்கு 10 லட்சம் நிவாரணம்
* குடிகாரர் திருந்தினால் அரசுவேலை
* சென்னை ஆர்.ஏ.புரம் 40 ஆண்டுகால குடியிருப்பு இடிப்பு பா.ம.க தொண்டர் தீக்குளிப்பு
* உதயநிதி சினிமாவை அரசு ஊழியர் பார்க்க கட்டாயப்படுத்தல்
* அனைத்து திரைப்பட வியாபார உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிடுங்குதல்
* கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மர்ம மரணம்
* நாங்குநேரி பள்ளி மாணவர் கஞ்சா போதையில் சக மாணவர் மாணவி மீது அரிவாள் வெட்டு 
* ரேசன் கடைகளில் செறிவூட்ட அரிசி 
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை இல்லை
* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஐ.ஜி யாதவ் பதவி உயர்வு 
* மொடக்குறிச்சி வடவர் போலீஸ் ரகுபதி மீது தாக்குதல்
* தவறான சிகிச்சையால் அரசு மருத்துவமனையில் கை அழுகி குழந்தை இறப்பு
* குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் குழந்தை தொழிலாளர் பற்றிய news 24x7 புகாரை ஏற்க மறுப்பு 
* அரசு அலுவலகம் புகுந்து மணல் மாபியா வி.ஏ.ஓ வெட்டிக் கொலை
* துடியலூர் அரசுப் பள்ளியில் இசுலாமிய மாணவியை செருப்பை சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்கள்
* விமான நிலையம் அமைக்க பரந்தூர் விளைநிலஙகள் பிடுங்குதல் அதனால் பெரிய போராட்டம் அதற்கு வேலி போட்டு போலீஸ் அடக்குமுறை
* அம்பாசமுத்திரம் பலர் பல் பிடுங்கிய போலீஸ் பல்வீர் சிங் அவரது இடைநீக்கம் ரத்து
* தொடர்ந்து 9 லாக்கப் மரணங்கள்
* நெல்லை ஆற்றில் கஞ்சா போதையில் பட்டியல் சிறுவர் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சமூகத்தினர்
* உதயநிதி சினிமாவில் பிசி அதனால் 2023 தேசிய விளையாட்டுக்கு 503 தமிழக மாணவர் அனுப்பப் படவில்லலை
* குறவர் பெண் ஆந்திரா போலீசால் வன்புணர்வு பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி சித்திரவதை 
* பள்ளி மாணவருக்கு அழுகிய முட்டை அதற்கு ஓடு மீதுள்ள கறுப்பு அச்சு உள்ளே சென்றுவிட்டதாக மழுப்பல்
* காஞ்சிபுரம் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் அது காக்கா முட்டை என்று மழுப்பல்
* மதுரை பெருங்குடி 6 வயது சிறுவன் உட்பட 5பேர் ஆதிக்க சாதிவெறியரால் வெட்டிக் கொலை
* சென்னை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு மிக அசட்டையாக நடந்துகொண்ட அரசு
* வெள்ள நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்
* உதயநிதி திரைப்படம் நடிப்பு
* தென்காசிக்கு சலூன் கோச் சொகுசு பெட்டியில் ஸ்டாலின் பயணம்
* ஜெயலலிதா மரணம் குறித்த குழப்பமான அறிக்கை 
* குறவருக்கு சாதிச் சான்றிதல் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி மகனுக்கு வேலை கிடைக்காமல் தந்தை தற்கொலை
* இதனால் குறவர் உரிமைக்காக 6 நாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் மற்றும் தென்காசி எம்.பி தனுஷ் குமார் KKSSRR வீட்டில் நிற்கவைத்து சாதிய ரீதியில் அவமரியாதை
* பத்திர பதிவு கட்டண உயர்வு
* ஓட்டல் தமிழ்நாடு எமரால்டு என பெயர்மாற்றம்
* செய்யாறு சிப்காட் ஆதரவுப் போராட்டம் பணம் கொடுத்து வெளியூர் நபர்களை விவசாயிகள் போல நடிக்க வைத்தது
* சத்துணவு தனியார் மயமாக்க முயற்சி
* வேலை நேரம் 12 மணிநேரமாக்க முயற்சி
* மவுன்ட் ரோடில் பொதுமக்களுக்கு இடையூறாக தெலுங்கு நடிகர் அல்லி அர்ஜூன் கார் ரேஸ் நடத்த மைதானம் அமைத்தல்
* செஸ் போட்டி பிரக்யானந்தா புறக்கணிப்பு
* இசுலாமிய அமைச்சர் 3 ல் 2 பதவி பறிப்பு 
* பி.டி.ஆர் விரட்டி அடிப்பு உதயநிதிக்கு பதவி
* விளையாட்டு மைதானஙகளில் மது அனுமதி 
* அரசு பஸ் மீது திமுக குடும்பம் நடத்தும் பீர் விளம்பரம்
* நகரங்களில் நோய்தாக்கிய தெருநாய் கடிகள்
* முதலீடு ஈர்ப்பு என்கிற பெயரில் அரபுநாடு, ஸ்பெயின், சிங்கபூர் என மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் குடும்ப சுற்றுலா
* அதானி உடன் ஒப்பந்தம் சென்னை துறைமுகம் தாரைவார்ப்பு
* மீண்டும் எட்டுவழி சாலை திட்டம் நடைமுறையில்
* திருப்பதி டோல் மாணவர் தாக்குதல் 
* திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைப்பு
* அரசு நீண்டநேர பஸ் விலையேற்றம்
* ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு
* கடன்சுமை பல மடங்கு உநர்ந்து இந்தியாவில முதலிடம்
* மாற்றுத்திறனாளி உலக்கோப்பை வாங்கியதாக முதல்வரையே ஏமாற்றியது
* துர்கா ஸ்டாலின் மினரல் வாட்டர் ஆலை
* குவாரி டென்டர் கேட்ட பட்டியல் சாதி நபர் ஆடை அவிழ்ப்பு
* சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கம் _ பொன் மாணிக்கவேல் 
* கலாசேத்ரா பாலியல் புகார்
* CAA எதிர்ப்பு போராட்டம் ஆனால் வாக்கெடுப்பில் ஆதரவு கையெழுத்து 
* புளியந்தோப்பு இறந்த குழந்தை உடல் அட்டைபெட்டியில் 
* புழல் பெண் கைதி தப்பி ஓட்டம்
* கருணாநிதி சிலை வைக்க மாடர்ன் தியேட்டர் நிலம் பிடுங்கல்
* ஒரே நேரத்தில் 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு
* எண்ணூர் எண்ணெய் கழிவு கடலில் கலப்பு
* பாட்டாக்குறிச்சி மலை அழித்து மைதானம்
* நெல்லை, தூத்துக்குடி  வெள்ளம் மாரி செல்வராஜ் மீட்புப் பணி
* தூத்துக்குடி தத்தளித்த நேரம் டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை
* பொன்முடி மனைவியுடன் கைது
* எண்ணூர் ஆலை அமோனியா கசிவு நள்ளிரவில் மக்கள் வெளியேற்றம்
* ஆதி திராவிடர் நலத்துறை நிதி பயன்படுத்தாமல் வைத்திருந்தது
* எம்பிளாய்மென்ட் இல் பதிந்து வேலை கிடைக்காத இளைஞர் உதவித்தொகை நிறுத்தம்
* நிறித்தப்பட்ட கெயில் குழாய் மீண்டும் மோடி அடிக்கல் நாட்டினார்
* அடிப்படை வசதிகள் இல்லாமல் கிளாம்பாக்கம் திறப்பு
* கிளாம்பாக்கம் ரயில்நிலையம் வெற்று அறிவிப்பு
* பள்ளிகளில் தமிழ்மன்றம் அமைத்து கருணாநிதி பெயர்
* கவுன்சிலர் புருசன்கள் அடாவடி
* எதிர்கட்சியாக 5000 ரூ பொங்கல் தொகுப்பு கேட்டு தற்போது 1000 ரூ கூட தரமுடியாமல் திணறல்
* கேலோஇந்தியா உதயநிதி டெல்லி சென்று மோடி அழைப்பு 
* முரசொலி மூலப் பத்திரம் வழக்கு ஆவணங்களைக் காட்டமுடியாமல் திணறல் 
* புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஈவேரா வீட்டுக்கு பட்டா வழங்கல் இளங்கோவனிடம் கையளிப்பு
* கிண்டி ரேஸ் கோர்ஸ் 700 கோடி வரி பாக்கி
* பல கோடி செலவில் கூட்டமே இல்லமால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி மாநாடு 
* பழைய பென்சன் முறை நடைமுறைக்கு கொண்டுவராமை 
* ஓட்டுநர் இல்லாமல் தினம் 6000 பஸ் நிற்கிறது
* ஓட்டுநர் காலி பணியிடம் 8 ஆண்டுகள் நிரப்பவில்லை என போக்குவரத்து ஊழியர் போராட்டம்
* முதியோர் பென்சன் நிறுத்தம்
* மோசமான நிலையில் இருந்த அரசு பஸ் RTo விடம்  ஒப்படைத்தவர் மீது நடவடிக்கை
* ஜல்லிக்கட்டு போராளிகள் மீதான வழக்கு ரத்து இல்லை 
* சல்லிக்கட்டு போராட்டத்தில் இறந்த மாணவருக்கு நிவாரணம் இல்லை
* ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயர்
* பள்ளிகளுக்கு தனியார் நிதி வேண்டல்
* மார்வாடி தெலுங்கர் உடன் சமத்துவ பொங்கல் கூத்து
* பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி குடும்பம் பெண் மீது கொடுமை
* நாகர்கோவில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை
* சென்னை ஆசிரியர் போராட்டம் இரவு தடியடி
* செவிலியர் போராட்டம் 
* திமுக பெண்களை இழிவு படுத்தி பலமுறை பேச்சு 
* 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி நாடக பேட்டி அதை அண்ணாமலை அநாகரீக விமர்சனம்
* மும்பையில் நயன்தாரா வழக்கில் அரசு வக்கீல்
* சட்டசபை நேரலை ஒளிபரப்ப முடியாது என்று மறுப்பு
* வேடந்தாங்கல் அருகே தொழிற்சாலை 
* அதானி முதலீடு வரவேற்பு
* பல்லடம் செய்தியாளர் கூலிப்படை வெட்டு
* தமிழ் பேசிய மாணவன் காது கிழிப்பு 
* ஆசிரியர் பணி தேர்வில் மொழிப்பாடமாக 'தமிழ் அல்லது தென்னிந்திய மொழிகள்' என திருத்தம்
* தண்டாரம்பட்டு  ஆதிக்க சமூகம் தனி கோவில் 
* தொடரும் ரேசன் அரிசி பதுக்கல் 100 கிலோ வுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தல் 5 முறை பிடிபட்டது
* வள்ளலார் பக்தர்கள் எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தல்
* மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா அறிவிப்பு ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்
*கன்னியாகுமரி கனிமவள லாரிகள் ஏற்படுத்தும்வதொடர் விபத்து,  ஒரே மாதத்தில் 4 வது விபத்து நடந்தது
* போதைப் பொருள் கடத்தல்
*யூட்யூப் விளம்பரம்
* பார்வையற்றோர் போராட்டம் தடியடி
* சட்டவிரோத முகாம் சாந்தன் இறப்பு


ஆறுதல்கள்....
* மகளிர்  பேருந்து இலவசம்
* மகளிர் உரிமைத் தொகை
* ரம்மி தடை
* கோகுல் ராஜ் சிறை
* கீழடி அருங்காட்சியம்
* காலை உணவு
* வெள்ள நிவாரண தொகை
* கூட்டுறவு நகைக்கடன் 3ல் 1 பங்கினர் ரத்து

_ Athimoolaperumal